சிக்கு புக்கு- விமர்சனம்

சிக்கு புக்கு ஓர் பார்வை


படம் பெயர்:  சிக்கு புக்கு

நடிப்பு:  ஆர்யா,ப்ரீத்திகா,ஸ்ரேயா,சந்தானம்

இசை: ஹாரி,லெஸ்ஸி

இயக்குனர்: மணிகண்டன்






     அழகிய இரு காதல் கதையை அருமையாக தந்து இருக்கிறார் இயக்குனர் மணிகண்டன். இவர் மறைந்த இயக்குனர்.ஜீவாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்....
கதையை லண்டனில் தொடங்கி, இந்தியாவில் முடிகிறார் இயக்குனர்.
     லண்டனில் இருந்து குடும்ப விசியமாக காரைக்குடி செல்லும் ஆர்ஜீன்(ஆர்யா), லண்டனில் இருந்து தந்தையை காண மதுரை செல்லும் ஸ்ரேயா என இருவருக்கும் இடையில் நடப்பதே கதையாக அமைத்து இருக்கிறார் இயக்குனர்...இருவரும் எதிர்சையாக சந்தித்து கொள்கிறார்கள். இதில் .
மார்டனாக வரும் ஸ்ரேயா துருதுருவென வலம் வருகிறார் அனைவரின் மனதிலும் மீண்டும் ஓர் குட்டி பட ஸ்ரேயாவாக காட்சியளிக்கிறார்...

     ஆர்ஜீன் தன் தந்தையின் டைரியை படிப்பதின் மூலம் தன் தந்தையின் காதலை தெரிந்துக்கொள்ள நேர்கிறது...ஆர்ஜீனின் தந்தையாக வரும் மற்றோரு ஆர்யாவின் பிளாஸ்பேக் காதல் கதை அனைவரையும் கவருகிறது..அப்பா கேரக்டரில் வரும் ஆர்யாவுக்கு ஜோடியாக வருகிறார் ப்ரித்திகா...மிகவும் அழகிய தேவதையாக காட்சியாளிக்கிறார்...பாவடை தாவணியில் மிகவும் அழகாக உள்ளார். தந்தையாக வரும் ஆர்யா கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்...கூர்மையான் பார்வை, உடல்வாகு, நடை என போலிஸ்யாகவே வலம்வருகிறார் ஆர்யா..

     இரண்டு ஆர்யாவையும் அழகாக வேறுபடுத்தி காட்டியிருக்கும் இயக்குனருக்கு ஓர் சபாஸ்....ஓர் நிலைமையில் தந்தை ஆர்யாவின் காதல் பிரியும் நிலை ஏற்படுகிறது..இக்காட்சி அனைவருக்கும்...ஓர் சோகத்தை ஏற்படுத்துகிறது....பிளாஸ்பேக்கில் வரும் சந்தானம் அனைவரையும் ...சிரிப்பு வெள்ளத்தில் மூழ்கடிகிறார்..அவரின் பேச்சு அனைவரையும் விடாமல் சிரிக்க வைக்கிறது....மேலும் சிரிக்க வைக்கும் வகையில் ஓர் காமெடி டீமே உள்ளது...லெல்லுசபா சுவாமிநாதன், வையாபுரி, ஜெகன் என ஓர் கமெடி கூட்டமே உள்ளது....சந்தானம் லூட்டி சொல்ல முடியாது அளவுக்கு செம்ம காமெடி....

     ஒளிபாதிவாளர் குருதேவின் பணி மிக அருமை தந்தை ஆர்யாவின் காதல் காட்சிகை மிகவும் அழகாக படம் பிடித்துள்ளார்..மேலும் ஒரு வித லைட் Effect முறையையும் பயன்படுத்தியுள்ளார்...லண்டன் பயணம், காரைக்குடி,மலைபகுதிகள் என மிக அழகாக காட்சியாக்கியுள்ளார்...
பாடல்கள் பெரிதாக இல்லாவிட்டாலும் கேட்கும் ரகம்..சுமார்
இரண்டு ஆர்யாவின் காதலும் என்ன ஆனாது...காதலர்கள் சேர்ந்தார்களா இல்லையா என்பதே கதை....

     பாடம் பார்த்துவிட்டு வரும் போது...லண்டன் ஆர்யா ஸ்ரேயா கதை தேவையில்லை என்பது போல் தோன்றுகிறது....பிளாஸ்பேக்கில் வரும் ஆர்யா கதையே அருமை...மிக அருமை அதற்காக ஓர் சபாஸ்....

மொத்ததில் படம் அருமை....சிக்கு புக்கு ஓர் அழகிய இளமை காதல் பயணம்.



எனது....மதிப்பெண் 



அச்சசோ! என்ன நண்பா இப்படி பண்றிங்க, நீங்க பாட்டால படிச்சிட்டு போய்கிட்டே இருக்கிங்க, உங்க கருத்துகள் மற்றும் வாக்குகளை பதிவு செய்துவிட்டு போங்கபா!....நன்றி...

3 comments:

  1. உங்கவிமரிசனம் பாத்தா படம் பாக்கல்லாம் போல இருக்கே.

    ReplyDelete
  2. arya vai purakkaniyungal. unmaiyana tamilanaga..

    ReplyDelete

DEAR FRIENDS PLZ SHARE TIS POST. TANKS!.


Dears... a New Category has been added now.. 3D Games... Download Latest 3D Games...CLICK HERE